Ageing, Disability & Home Care

  • High contrast version
  • Increase the text size
  • Decrease the text size
  • Print this page

Tamil

தமிழ் tamiḻ

Ageing, Disability and Home Care என்றால் என்ன?

Ageing, Disability and Home Care (ADHC) என்பது பின்வருகிறவர்களுக்கு ஆதரவளிக்கிறதோர் என்எஸ்டபிள்யூ அரசாங்கத் துறை (NSW Department of Family and Community Services) ஆகும்.

  • வயதானவர்கள்
  • ஊனமுற்றவர்கள்
  • அவர்களது குடும்பத்தினர் அல்லது அவர்களைக் கவனித்துக் கொள்கிறவர்கள்.

ஊனம் என்றால் என்ன?

ஒரு நபர், அன்றாடக் காரியங்களைச் செய்வதே கடினமாக இருப்பதாகக் காண்கிற பட்சத்தில், அவருக்கு ஊனமிருக்கலாம். உதாரணமாக, கற்றுக் கொள்ளுதல், காரியங்களைக் குறித்து சிந்தனை செய்தல், பார்த்தல், கேட்டல், பேசுதல் அல்லது அங்குமிங்கும் நடமாடுதல் ஆகியவற்றில் சிரமமிருக்கலாம்.

என்னென்ன விதமான ஆதரவுகள் கிடைக்கின்றன?

ஊனமுற்றவர்களின் தேவைகளைப் பொறுத்து, அவர்களுக்கு வெவ்வேறு விதமான ஆதரவுகள் கிடைக்கின்றன. அது போன்ற ஆதரவிற்கான சில உதாரணங்கள் இதோ:

  • உங்களுக்கேற்ற சேவைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனையையும் பெற்றுத் தருதல்
  • உங்களுக்கு என்ன தேவை என்பதைக் கணக்கிட்டு, உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த உங்களுக்கு உதவுதல்
  • நீங்களாகவோ அல்லது மற்றவர்களோடு சேர்ந்தோ, உங்களது வீட்டில் இன்னும் அதிகச் சுதந்திரமாக வாழ்தல்
  • உங்கள் குழந்தையின் ஊனத்தையும் என்ன விதமான ஆதரவு கிடைக்கிறது என்பதையும் புரிந்து கொள்தல்
  • வேலைவாய்ப்பு மற்றும் சமூகச் செயல்பாடுகளுக்கான புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ளுதல்
  • உங்கள் சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருத்தல்
  • சாப்பிடுதல், அங்குமிங்கும் நடமாடுதல் மற்றும் பேசுதல் போன்ற அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதை எளிதாக்குதல்
  • உங்களுக்கு உதவிபுரிகிற உதவிகள் அல்லது உபகரணங்களை பெற்றுத் தருதல்
  • உங்கள் குடும்பத்தார் அல்லது உங்களைக் கவனித்துக் கொள்பவர் ஓய்வெடுக்கும் போது ஓர் சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளுதல்.

ஆதரவை வழங்குவது யார்?

பெரும்பாலான ஆதரவுகள், ADHC ஆல் நிதியளிக்கப்படுகிற உங்கள் உள்ளூர் சமுதாயத்தில் உள்ள அமைப்புகளாலேயே வழங்கப்படுகின்றன. இத்தகைய ஆதரவுகளில் சிலவற்றை, ADHC-க்காகப் பணியாற்றுகிறவர்களும் வழங்குகிறார்கள்.

ஊனமுற்றவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், அவர்களது தேவைகள் மற்றும் அவர்களது வாழ்க்கைக்குப் பொருத்தமாகக் கிடைக்கிற ஆதரவு குறித்து இன்னும் அதிகமான வாய்ப்புகள் இருக்கும் வகையில், ADHC உழைக்கிறது.

இன்னும் அதிகத் தகவல்களை நான் எப்படிப் பெற்றுக் கொள்ள முடியும்?

உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ கிடைக்கிற உதவி குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, உங்கள் உள்ளூர் பகுதியில் உள்ள தகவல், பரிந்துரை மற்றும் உள்ளெடுப்புக் குழுவினரை (Information, Referral and Intake team) அழையுங்கள்.

உங்களுக்கு செவித்திறன் இல்லாமலிருந்தாலோ அல்லது செவித்திறன் கோளாறு அல்லது பேச்சுக் கோளாறு இருந்தாலோ, உங்கள் உள்ளூர் சேவைக்கானதோர் தொலைபேசி எண்ணைத் தேர்ந்தெடுத்து, National Relay Service வாயிலாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

  • TTY உபயோகிப்பவர்கள், 133 677 என்ற எண்ணைத் தொலைபேசியில் அழைத்து, நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கான தொலைபேசி எண்ணுக்காகக் கேளுங்கள்.
  • Speak and Listen உபயோகிப்பவர்கள், 1300 555 727 என்ற எண்ணைத் தொலைபேசியில் அழைத்து, நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கான தொலைபேசி எண்ணுக்காகக் கேளுங்கள்.

உங்கள் மொழியில் உங்களுக்கு உதவி தேவை என்றால், தயவுசெய்து 131 450 என்ற எண்ணில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவையை (Translating and Interpreting Service (TIS)) அழையுங்கள்.

Display this in English

If you need assistance in a language other than English to understand this information, please call the Translating and Interpreting Service (TIS) on 131 450.

share on facebook share on tweet share on yammershare by email
Back to: top | ADHC home page